தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
'தனி ஒருவன்' என்ற தரமான படத்தைக் கொடுத்து வியக்க வைத்த இயக்குனர் மோகன் ராஜா அடுத்து இயக்கி வரும் 'வேலைக்காரன்' படத்தின் முதல் பார்வையை நேற்று வெளியிட்டார். அது வெளியான அடுத்த சில நிமிடங்களிலேயே அது ஒரு 'காப்பி போஸ்டர்' என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது.
1993ம் ஆண்டு மைக்கேல் டக்ளஸ் நடித்து வெளிவந்த 'ஃபாலிங் டவுன்' என்ற ஹாலிவுட் படத்தின் போஸ்டரை அப்படியே காப்பியடித்து 'வேலைக்காரன்' போஸ்டரை உருவாக்கியுள்ளார்கள்.
இரண்டு போஸ்டர்களுக்கும் ஆறு வித்தியாசங்களாவது உள்ளது என்றும் சமூக வலைத்தளங்களில் கிண்டலடித்து வருகிறார்கள். பல மீம்ஸ்கள் வெளிவந்து கலக்கிக் கொண்டிருக்கின்றன. சிவகார்த்திகேயன் பெண் வேடத்தில் நடித்த 'ரெமோ'வுக்குக் கூட அதிக மீம்ஸ்கள் வந்ததில்லை. ஆனால், 'வேலைக்காரன்' முதல் பார்வை வெளியான அடுத்த நிமிடமே மீம்ஸ்கள் வர ஆரம்பித்துவிட்டது.
“மைக்கேல் டக்ளஸ் கையில் துப்பாக்கி இருக்கிறது, ஆனால், சிவகார்த்திகேயன் கையில் அருவாள் உள்ளது. மைக்கேல் டக்ளஸ் கண்ணாடி போட்டிருக்கிறார், ஆனால், சிவகார்த்திகேயன் கண்ணாடி போடவில்லை. மைக்கேல் டக்ளஸ் கையில் சூட்கேஸ் உள்ளது, ஆனால், சிவகார்த்திகேயன் கையில் லேப் டாப் பேக் உள்ளது. டக்ளஸ் ஐ.டி கார்டு போடவில்லை, ஆனால், சிவகார்த்திகேயன் ஐ.டி கார்டு போட்டிருக்கிறார்,” என சமூக வலைத்தளங்களில் ஒப்பீடும் நடந்து வருகிறது.
'வேலைக்காரன்' பட இயக்குனர் மோகன்ராஜா போஸ்டரை மட்டும் காப்பி அடித்துள்ளார், கதையை காப்பி அடிக்கவில்லை என்று நம்புவோம்.