பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
பாகுபலி-2, இந்திய சினிமா வரலாற்றில் ஒரு புதிய மைக்கல் என்று தான் சொல்ல வேண்டும். ஹாலிவுட் படங்களுக்கு நிகராக வசூலில் சாதனை படைத்துள்ளது. தற்காலிகமாக இந்த சாதனையை அமீர்கானின் தங்கல் படம் எட்டியிருந்தாலும், பாகுபலி-2, இன்னும் சீனா உள்ளிட்ட பல நாடுகளில் ரிலீஸாக இருப்பதால் நிச்சயம் இந்தப்படம் அதிக வசூல் சாதனை புரிந்த இந்திய படமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இதுஒருபுறம் இருக்க சல்மானின் டியூப்லைட் படம் பாகுபலி-2 சாதனையை முறியடிக்கும் என நடிகர் விவேக் ஓபுராய் கூறியிருக்கிறார்.
இதுப்பற்றி டியூப்லைட் படத்தின் புரொமோஷனில் இருந்த சல்மான் கானிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது... "பாகுபலி-2 சாதனையை டியூப்லைட் படம் முறியடிப்பது சந்தேகம் தான். பாகுபலி-2 படம் ஒரு எதிர்பாராத கற்பனை கலந்த வெற்றிப்படம். இது ஒரு டப்பிங் படம் என்றே ரசிகர்கள் பார்க்கவில்லை. முதல்பாகம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது, ஆகையால் பாகுபலி-2 படத்திற்கும் ரசிகர்கள் அதிக வரவேற்பு தந்தார்கள். அந்த வகையில் நமது ரசிகர்களுக்கு நன்றி சொல்கிறேன். அனைவரும் தியேட்டரில் சென்று படம் பார்த்து இவ்வளவு பெரிய வெற்றியை தந்திருக்கிறார்கள். அவர்கள் பணம் வீணாகவில்லை" என்று கூறியுள்ளார்.
சல்மான் நடித்துள்ள டியூப்லைட் படம் வருகிற ஜூன் 23-ம் தேதி ரிலீஸாக உள்ளது. டியூப்லைட் படத்தை கபீர்கான் இயக்கியுள்ளார். சல்மான் கானே தயாரித்திருக்கிறார்.