வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
இந்தியில் சஞ்சய் தத் தற்போது நடித்து வரும் படம் பூமி. இந்த படத்தில் மணிரத்னத்தின் காற்று வெளியிடை படத்தில் நாயகியாக நடித்த அதிதிராவ் ஹைதரி நாயகியாக நடித்து வருகிறார். ஓமங்க் குமார் இந்த படத்தை இயக்கி வருகிறார். கதாநாயகியை முன்னிறுத்தும் கதையில் உருவாகும் இந்த படத்தில் அதிதிராவ் ஹைதரி, பூமி என்ற கேரக்டரில் நடிக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு மும்பையில் பிசியாக நடந்து வருகிறது. இந்த படத்திற்காக ஒரு பாடல் காட்சியை செட் போட்டு படமாக்கியுள்ளனர். அதில், சித்தார்த்குப்தா-அதிதிராவ் ஆகியோர் நடித்து வந்துள்ளனர். படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது அந்த செட்டில் எதிர்பாராதவிதமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் மொத்த யூனிட்டும் அதிர்ச்சியில் ஆளுக்கொரு பக்கமாக ஓடி அந்த செட்டை விட்டு வெளியேறியுள்ளனர். முக்கியமாக, அதிதிராவ், சித்தார்த் குப்தா ஆகியோரை உடனடியாக அங்கிருந்து வெளியேற்றியுள்ளனர். அதையடுத்து தீயணைப்புத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர். ஆனால் தீயணைப்புத்துறையினர் வருவதற்குள் அந்த செட் முழுக்க எரிந்து சாம்பலாகி விட்டதாம்.