தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, இப்போது, ஹாலிவுட்டிலும் வெற்றிக்கொடி நாட்டி வருவது தெரிந்த விஷயம் தான். அமெரிக்கா போன்ற நாடுகளில், 'பேவாட்ச்' என்ற தொலைக்காட்சி தொடர், மிகவும் பிரபலம். இதை தழுவி, அதே பெயரில் ஹாலிவுட் படம் தயாராகியுள்ளது. இதில், போதை மருந்து கடத்தல் கும்பலைச் சேர்ந்த பெண்ணாக நடித்து, ஆக்ஷ்ன் வேடங்களில் வெளுத்து கட்டியிருந்தார் பிரியங்கா சோப்ரா. ஹாலிவுட்டின் பிரபல நடிகர்களான, வெய்ன் ஜான்சன், ஜாக் எப்ரான் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர். தற்போது, இந்த படம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு இன்று வெளியாகிறது. 'டபிள்யூ டபிள்யூ எப்' போட்டிகளில், 'ராக்' என்ற பெயரில் பங்கேற்கும் வெய்ன் ஜான்சன், இதில், பிரியங்காவுடன் இணைந்து நடித்திருப்பது, நம் நாட்டில் உள்ள ஹாலிவுட் ரசிகர்களுக்கு, பெரிய விருந்தாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் வெளிநாடுகளில் இப்படம் எதிர்பார்த்த வசூலை குவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.