ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
ரஜினிகாந்த் படங்களில் எது ஒன்று இடம் பிடித்தாலும் அது பற்றிய பரபரப்பு தொற்றிக் கொள்ளும். 'அண்ணாமலை' பட சைக்கிளில் இருந்து அதற்கு பல உதாரணங்களைச் சொல்லலாம். சமீபத்தில் வெளியான 'காலா' படத்தின் முதல் பார்வையில் ரஜினிகாந்த் ஒரு மகிந்திரா ஜீப்பின் மீது அமர்ந்து போஸ் கொடுக்கும் போஸ்டர் வெளியானது.
அந்தப் போஸ்டரைப் பார்த்ததும் மகேந்திரா நிறுவனத்தின் சேர்மன் ஆனந்த் மகிந்திரா, “ஒரு முன்னோடி ஒரு ஜீப்பை தன்னுடைய சிம்மாசனமாகப் பயன்படுத்தும் போது அதுவும் ஒரு முன்னோடிதான்” என்றும், “இந்த ஜீப்பைப் பற்றித் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் அதை எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள். எங்களது ஆட்டோ அருங்காட்சியகத்தில் அதை வைக்க வாங்கிக் கொள்வேன்” என்றும் கூறியிருந்தார்.
அதற்கு 'காலா' படத்தின் தயாரிப்பாளரான தனுஷ், “மிக்க நன்றி சார். சூப்பர்ஸ்டார் அதை தற்போது ஷுட்டிங்கில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். ஷுட்டிங் முடிந்ததும் அது உங்களை வந்தடையும் என உறுதி கூறுகிறேன்,” என பதிலளித்திருந்தார்.
அதற்கு ஆனந்த் மகிந்திரா, “அற்புதம்... உங்களது பதிலுக்கு எனது பாராட்டுக்கள். உங்களுக்கும் குழுவினருக்கும் எனது வாழ்த்துகள்,” என நன்றி தெரிவித்துள்ளார்.
'காலா' படத்தின் ஜீப்பும் ஆரம்பத்திலேயே ஒரு கவனத்தை ஈர்த்துவிட்டது.