இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு |
சிம்பு நடித்த படம் 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படம் வருகிற ரம்ஜானையொட்டி ஜூன் 23-ஆம் தேதி வெளியாகிறது. அதே தேதியில் வனமகன், நெஞ்சம் மறப்பதில்லை படங்களும் வெளியாவதால் ஏஏஏ படத்திற்கு எதிர்பார்த்த தியேட்டர்கள் கிடைக்குமா என்று தெரியவில்லை.
இந்த நிலையில், ஏஏஏ படத்தின் வியாபார விஷயங்கள் தற்போது சூடு பிடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 'அன்பானவன் அசராதவன் அடங்காதவன்' படத்தின் சென்னை விநியோக உரிமையை ஜாஸ் சினிமாஸும், மதுரை ஏரியா விநியோக உரிமையை சுஷ்மா சினி ஆர்ட்ஸும் வாங்கியுள்ளன.
திருச்சி ஏரியா விநியோக உரிமையை 'செந்தூர் சினிமாஸ்' நிறுவனம் வாங்கியுள்ளது. மோகன்லால் நடிப்பில் உருவாகியுள்ள 'புலிமுருகன்' படத்தின் தமிழக விநியோக உரிமையை 'செந்தூர் சினிமாஸ்' நிறுவனம்தான் பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது.
'த்ரிஷா இல்லனா நயன்தாரா' என்ற ஆபாசமான படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படம் இது. அதனாலோ என்னவோ ஏஏஏ படத்திலும் கிளுகிளுப்பான விஷயங்கள் இருக்கும் என்று தகவல் பரவியது. ஆனால் ஏஏஏ படத்தில் கிளுகிளுப்பான காட்சிகளோ, ஆபாசமான காட்சிகளோ நிச்சயம் இருக்காதாம்.