ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தேனாண்டாள் ஸ்டுடியோஸ் லிமிடெட் என்ற பேனரில் ராமநாராயணனின் மகன் முரளி ராமசாமி தயாரிக்கும் சங்கமித்ரா படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் நீக்கப்பட்டதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் நடைபெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவில் சங்கமித்ரா படம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த அறிமுக விழாவுக்காக ஏகப்பட்ட பணம் செலவிடப்பட்ட நிலையில், சங்கமித்ரா படத்திலிருந்து ஸ்ருதிஹாசன் விலக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
ஸ்ருதிஹாசன் நீக்கப்படவில்லை... விலகிவிட்டார் என்று ஒரு தரப்பினரும், விலகவில்லை... நீக்கப்பட்டார் என்று ஒரு தரப்பினரும் சொல்லி வருகின்றனர். இதற்கிடையில், சங்கமித்ரா படம் ட்ராப்பாகிவிட்டது என்று தகவல் பரவி வருகிறது. சங்கமித்ரா படத்தின் பட்ஜெட் 300 கோடி என்பதால், அதற்கான வெளிநாட்டு முதலீட்டை திரட்டுவதற்காகவே கேன்ஸ் திரைப்பட விழாவில் இப்படத்தின் அறிமுக நிகழ்ச்சியை நடத்தினார்களாம். ஆனால் தயாரிப்பாளர் எதிர்பார்த்த அளவுக்கு வெளிநாட்டு முதலீட்டு வரவில்லையாம்.
அதனால் உள்நாட்டில் 300 கோடியை திரட்டி படம் எடுக்க மேலும் காலம் தாமதம் ஆகும். இதை எல்லாம் கருத்தில் கொண்டு சங்கமித்ரா படத்தை ட்ராப் பண்ணும் முடிவுக்கு தயாரிப்பாளர் வந்துவிட்டதால், அதற்கு முன்னதாக தானே அந்தப் படத்திலிருந்து விலகியதாக ஸ்ருதிஹாசன் தன் நெருக்கமானவர்களிடம் சொல்லி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.