ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் படம் தானா சேர்ந்த கூட்டம். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், கே.எஸ்.ரவிக்குமார், செந்தில், தம்பி ராமைய்யா, சத்யன் உள்பட பலர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையிலும் இன்னும் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகாதது சூர்யா ரசிகர்களை டென்சன் செய்திருக்கிறது. இதனால் மாதக்கணக்கில் பொறுமை காத்தவர்கள் இப்போது இணைய தளங்களில் மீம்ஸ் வெளியிட்டு வருகிறார்கள்.
அதோடு, ஒரு மாதத்திற்கு முன்பே விரைவில் பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று டுவிட்டரில் தெரிவித்த விக்னேஷ்சிவன் சொன்னபடி வெளியிடவில்லை. இந்நிலையில் தற்போது பர்ஸ்ட்லுக்கை வெளியிட்டே ஆக வேண்டும் என்கிற நிலையில், அதற்கான வேலைகள் இறங்கியிருக்கிறார். என்றாலும், சூர்யா ரசிகர்களின் டுவிட்டரில் கேள்வி மேல் கேள்வி கேட்டு வருவதால், அவர்களை தற்காலிகமாக அமைதிப்படுத்தும் முயற்சியாக தற்போது சூர்யா கேரம் விளையாடுவது போன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார் விக்னேஷ்சிவன்.