ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
மைதானத்தில் விளையாடி வந்த சச்சின் இப்போது திரையிலும் விளையாட தொடங்கிவிட்டார். சச்சினின் வாழ்க்கை, சச்சின் ஏ பில்லியன் டிரீம்ஸ் என்ற பெயரில் வெளியாகியுள்ளது. ஜேம்ஸ் எர்ஸ்கின் இயக்கியுள்ள இப்படத்தில் சச்சினே நடித்திருக்கிறார். இப்படத்திற்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
சுமார் ரூ.30 கோடி பட்ஜெட்டில் உருவான சச்சின் படம் கடந்த வெள்ளியன்று வெளியானது. முதல்நாளில் ரூ.8.40 கோடியும், 2வது நாளில் ரூ.9.20 கோடியும், மூன்றாம் நாளான நேற்று ரூ.10.25 கோடியும் என மூன்று நாட்களில் மொத்தம் ரூ.27.85 கோடி வசூலித்திருக்கிறது. இன்னும் ஒருவாரத்திற்கு மேலாக படம் நிச்சயம் ஓடும். ஆகையால் படம் மேற்கொண்டு ரூ.10 கோடிக்கும் அதிகமான வசூல் கிடைக்கும் என எதிர்பார்ப்பதால் நிச்சயம் படம் பாக்ஸ் ஆபிஸில் இணையும் என்கிறார்கள் விநியோகஸ்தர்கள்.
அதேசமயம், சச்சின் படம் ஒரு ஆவணப்படம் போன்று வெளியாகியிருப்பதால் தோனி படத்திற்கு கிடைத்த வரவேற்பு சச்சின் படத்திற்கு கிடைக்கவில்லை என்பதே நிதர்சணமான உண்மை.