Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிக்பாஸ் நிகழ்ச்சி என்னை தமிழக குடும்பத்துக்குள்ளும் கொண்டு செல்லும் - கமல்

26 மே, 2017 - 17:42 IST
எழுத்தின் அளவு:
Bigboss-will-reach-me-in-Tamil-people-house-says-Kamal

சமீபத்தில் எங்கும், எல்லோராலும் பேசப்படும் ஒரு விஷயம் பிக்பாஸ். மக்கள் மனதில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளதற்கு முக்கிய காரணம், இதை தொகுத்து வழங்க இருப்பது கமல்ஹாசன் என்பது கூடுதல் சிறப்பு. பிக்பாஸ் புரோமோவை வெளியிட்டு பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அவர் பேசும்போது,


நான் கம்பெனி ஆரம்பித்த போது கூட பாஸ் வேஷம் போட்டது இல்லை. சினிமாவில் இதுவரை வில்லனாக, குள்ளனாக, நாயகனாக, போலீஸாக, அமெரிக்கனாக, இந்தியனாக நடித்திருக்கிறேன். நிஜத்தில் இந்தியனாக வாழ்ந்து வருகிறேன். இந்த நிகழ்ச்சி மூலம் ஒவ்வொரு தமிழக குடும்பத்துக்குள்ளும் சென்றடைய ஒரு நல்ல வாய்ப்பாக இதை எடுத்துக் கொள்கிறேன்.


நாலரை வயதிலிருந்து இந்த தொழிலில் இருக்கிறேன். என்னுடைய எந்த முதல் வேலையாக இருந்தாலும் அதை பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்து கொள்வது வழக்கம். என்ன தான் புதுமை பேசினாலும் பழமை கொஞ்சம் ஒட்டிக்கொண்டு இருக்கிறது. அதனால் தான் விஜய் டிவியில் வருவதற்கு முன்னர் கூட பத்திரிகையாளர்கள் பார்க்க வேண்டும் என்று விரும்பி உங்களை சந்தித்தேன்.


அமிதாப் பச்சன் நிறைய நிகழ்ச்சிகளை நடத்தியிருந்தாலும், பிக் பாஸ் நிகழ்ச்சியை சல்மான் கான் வித்தியாசமாக செய்திருந்தார். அது எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. 14 பிரபலங்கள் ஒரே வீட்டில் 100 நாட்கள் எந்த வெளியுலக தொடர்பும் இல்லாமல் தங்குவார்கள். அவர்களை 30 கேமராக்கள் பதிவு செய்யும். அவற்றை நான் அவ்வப்போது கண்காணிப்பேன்.


அமீர்கான் செய்த சத்யமேவ ஜயதே போல, அவரை விடவும் அதிகமாக நான் கடந்த பல வருடமாக செய்து வருகிறேன். இதை நான் பெருமையாக சொல்லிக் கொள்வேன். இந்நிகழ்ச்சியின் அடிநாதம் சொல்ல வருவது ஒத்துழைப்பு தான். 21-ம் நூற்றாண்டில் ஒத்துழைப்பு தான் மிக முக்கியம். இப்போது யுத்தத்தில் கூட எதிரிகளை மொத்தமாக அழித்துவிட முடியாது. அவர்கள் இருந்து கொண்டே தான் இருப்பார்கள்.


ஜூன் 25ஆம் தேதி முதல் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. வார இறுதி நாட்களில் கமல் கலந்து கொள்ளுமாறு எபிசோடு வடிவமைக்கப்பட்டுள்ளது. விழாவில் விஜய் டிவியின் பொது மேலாளர் கிருஷ்ணன் கலந்து கொண்டார். திவ்யதர்ஷினி தொகுத்து வழங்கினார்.


Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மறக்க முடியுமா? - வெயில்மறக்க முடியுமா? - வெயில் மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி மகளையே கேவலப்படுத்துறாங்க : சின்மயி

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in