‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
நடிகர் கமல்ஹாசன் முதன்முறையாக சின்னத்திரை நிகழ்ச்சியான பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். பிக்பாஸ் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அப்போது பிக்பாஸ் புரொமோ டிரைலர் பத்திரிகையாளர்களுக்கு திரையிட்டு காட்டப்பட்டது. அதில், தோன்று கமல்...
"நான் நடிகனாக சினிமாவில் பல வேஷங்கள் போட்டுள்ளேன். ஆனால் என்னை விட அதிக வேஷம் போட்டவர்கள் நீங்கள்(மக்கள்) தான். வீட்டில் ஒருமுகம், வெளியே ஒருமுகம், ஓட்டுக்கு காசு வாங்கும் போது ஒருமுகம், ஓட்டுப்போடும் போது ஒருமுகம், நண்பர்களிடம் ஒருமுகம், பேஸ்புக்கில் ஒருமுகம். இதுல எது உண்மையான முகம்? பிக்பாஸ், 14 பிரபலங்கள், 100 நாட்கள், 30 கேமராக்கள், ஒரே வீட்டில், ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, ஐ வில் பி வாட்சிங்” என்று கமல் அந்த டிரைலரில் பேசுகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி ஜூன் 25-ம் தேதி முதல் விஜய் டிவியில் ஒளிப்பரப்பாக உள்ளது.