மோகன்லாலை சந்தித்தது மிகப்பெரிய கவுரவம் : ரிஷப் ஷெட்டி | வேற்றுக்கிரக மனிதரய்யா நீங்கள் : பஹத் பாசிலுக்கு விக்னேஷ் சிவன் புகழாரம் | இது என்ன பாகிஸ்தானா? : நடிகை ஹர்ஷிகா பூனாச்சா ஆவேசம் | அரசியல் கட்சித் தலைவராக இருந்து விஜய் செய்தது சரியா ? | மோகன்லாலுடன் 56வது முறையாக ஜோடி சேரும் ஷோபனா | 'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? |
தமிழ் சினிமா சரித்திரத்தில் தவிர்க்க முடியாத ஆளுமை ஆச்சி மனோராமா. 5 முதல்வர்களோடு நடித்தவர். 5 தலைமுறையினரோடு நடித்தவர். ஆயிரம் படங்களுக்கு மேல் நடித்து கின்னஸ் சாதனை படைத்தவர். நாடக நடிகையாக, சினிமா நாயகியாக, காமெடி நடிகையாக, குணசித்திர நடிகையாக, பாடகியாக, சின்னத்திரை நடிகையாக, தயாரிப்பாளராக அவர் எடுத்த அவதாரங்கள் அதிகம். மனோரமா இன்று நம்மோடு இல்லை. ஆனால் இன்று அவருக்கு 80-வது பிறந்த நாள். பத்மஸ்ரீ, தேசிய விருது, கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளுக்கு சொந்தக்காரரான மனோரமாவின் பிறந்த நாள் எத்தனை பேருக்கு நினைவிருக்கும் என்று தெரியாது. இருந்தாலும் காலத்தை வென்று நிற்கும் இந்த மாபெரும் கலைஞரை போற்றுவோம்.