'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
குடும்பம் குழந்தை குட்டிகள் என்று தியேட்டர்களுக்கு வந்து படம் பார்க்க வேண்டும் என்று தான் எல்லோருமே நினைப்பார்கள். ஆனால் இந்தி நடிகை பிரியங்கா சோப்ராவோ, தான் நடித்துள்ள பேவாட்ச் படத்தை, தங்களது குழந்தைகளுடன் வந்து பார்க்க வேண்டாம் என்று பெற்றோர்கள் ஒரு வேண்டுகோள் வைத்திருக்கிறார்.
காரணம், ஆங்கிலத்தில் உருவாகியுள்ள இந்த பேவாட்ச் படத்தில் ஆக்சன் மட்டுமின்றி கிளாமர் காட்சிகளும் நிறைந்துள்ளதாம். குறிப்பாக, அந்த படத்தின் புரொமோசனுக்காக அமெரிக்கா சென்றிருந்த பிரியங்கா சோப்ரா அங்குள்ள பீச்சில் பிகினி உடையணிந்து குளியல் போட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். ஆனால் அதற்கு இணையாக பேவாட்ச் படத்திலும் பிரியங்கா சோப்ரா மட்டுமல்லாது படத்தில் நடித்துள்ள மற்ற சகநடிகைகள் பிகினி காட்சிகளில் இடம்பெற்றிருக்கிறார்களாம். அதனால், ஜூன் 2-ந்தேதி தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகயிருக்கும் அந்த படத்தை பார்க்க தங்களது குழந்தைகளுடன் யாரும் தியேட்டருக்கு வரவேண்டாம் என்று மும்பை மீடியாக்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா.