ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
தனுஷ் இயக்கிய ப.பாண்டி படத்தில் ரேவதியின் மகளாக நடித்தவர் தொகுப்பாளர் திவ்யதர்ஷினி. அந்த படத்தில் நடித்து தனுஷிடம் பாராட்டு பெற்ற டிடிக்கு தியேட்டர்களிலும் கைதட்டல் கிடைத்தது. அதன்காரணமாக, அதையடுத்து சில படங்கள் வந்தபோதும், கேரக்டர்கள் பிடிக்காததால் நேரடியாகவே சொல்லி தவிர்த்து விட்டார் டிடி.
மேலும், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் அன்புடன் டிடி நிகழ்ச்சியை நடத்தி வரும் அவர், தனது டுவிட்டரில் அவ்வப்போது சினிமா மற்றும் அரசியல் சம்பந்தமான விசயங்களுக்கும் கருத்து கூறி வருகிறார். இந்நிலையில், நேற்றைய தினம் வெளியான ரஜினியின் காலா படத்தின் பர்ஸ்ட் லுக் குறித்து தனது டுவிட்டரில் தனது ரியாக்சனை வெளிப்படுத்தியிருக்கிறார். அதாவது, மனசுக்குள் எவ்வளவு பெரிய கஷ்டங்கள் இருந்தாலும் தலைவரின் முகத்தை பார்த்த நொடியில் அத்தனையும் மறந்து போய்விடும் என்று கூறியுள்ளார் டிடி.