வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா, குவான்டிகோ என்ற சீரியல் மூலம் ஹாலிவுட்டில் அடியெடுத்து வைத்தார். அந்த சீரியல் அமெரிக்காவில் பெரிய அளவில் பிரபலமானது. அதையடுத்து தற்போது பேவாட்ச் என்ற ஹாலிவுட் படத்தில் நடித்திருக்கிறார் பிரியங்கா சோப்ரா. சேத் கோர்டன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் பிகினி உடை எல்லாம் அணிந்து கலக்கியிருக்கிறாராம் அவர்.
இந்த நிலையில், அப்படத்தின் பிரமோஷனுக்காக சமீபத்தில் அமெரிக்கா சென்ற பிரியங்கா சோப்ரா, அங்குள்ள மியாமி கடற்கரையிலும் பிகினி உடையில் ஆனந்த குளியல் போட்டார். அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக பரவியது. அதோடு அந்த படத்திற்கும் மிகப்பெரிய விளம்பரமாகி விட்டது. இப்படம் மே 25-ந்தேதி வெளியாகிறது.
அதோடு, பிரியங்கா சோப்ராவை முன்வைத்து இந்தியாவிலும் இப்படம் டப் செய்யப்பட்டு வெளியாகிறது. அதையடுத்து, அப்படத்தை தணிக்கைக்குழுவிற்கு அனுப்பியுள்ளனர். ஆனால் படத்தை பார்த்த தணிக்கை அதிகாரிகளுக்கு ஒரே ஷாக், ஏகப்பட்ட பிகினி காட்சிகளும், இரட்டை வசனங்களும் இருந்தன. இதையடுத்து சில காட்சிகளை நீக்கிவிட்டு படத்திற்கு ஏ சான்று கொடுத்துள்ளனர்.