தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
நடிகர் சல்மான் கானின் சகோதரர் அர்பாஸ் கான். நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் என பன்முகம் கொண்டவர். சல்மான் கான் நடிப்பில் வெளியான தபாங்-2 படத்தை அர்பாஸ் தான் இயக்கினார். இப்படம் சூப்பர் ஹிட்டாக தபாங்-3 படத்தை உருவாக்க எண்ணினார் அர்பாஸ், இதுதொடர்பாக தன் அண்ணன் சல்மானிடம் பேசி ஓகே., வாங்கிவிட்டார். படம் பற்றிய அறிவிப்பும் எப்போதோ வெளியாகிவிட்டது. ஆனால் இன்னும் படம் ஆரம்பிக்கப்படவில்லை. தொடர்ந்து சல்மான், அடுத்தடுத்து படங்களில் பிஸியாகி வருவதால் இப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிக்கொண்டே போய் வருகிறது.
தற்போது சல்மான்கான், டியூப்லைட் படத்தை முடித்துவிட்டு, டைகர் ஜிந்தே ஹே என்ற படத்தில் நடிக்கிறார். இதன்பிறகு தபாங்-3 படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது வான்ட்டட் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க போகிறாராம். இதனால் தபாங்-3 படம் மீண்டும் தள்ளிப்போய் உள்ளது. தன்னுடைய படத்தை தொடர்ந்து தள்ளிக்கொண்டே போய் வருவதால் அண்ணன் சல்மான் மீது அர்பாஸ் கான் அதிருப்தியில் இருப்பதாக பாலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது.