டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு | ஏப்ரல் மாதத்தில் ரஷ்யா செல்லும் ‛தி கோட்' படக்குழு |
சுதந்திர தினத்தன்று, புது கட்சி அறிவிப்பை வெளியிட, நடிகர் ரஜினி திட்டமிட்டுள்ளார். கட்சிக் கொடியை, இரு தினங்களுக்கு முன் வடிவமைத்துள்ளார். ரஜினி கட்சியில் சேர, நடிகைகள் மீனா, நமீதா முடிவு செய்துள்ளதாகத் தெரிகிறது.
சென்னை, கோடம்பாக்கத்தில் உள்ள, ராகவேந்திரா திருமண மண்டபத்தில், ரஜினி, சமீபத்தில், தன் ரசிகர் களை சந்தித்தார். அப்போது, அரசியலில் மாற்றத்தை உருவாக்கும் போருக்கு, ரசிகர்கள் தயாராக இருக்க வேண்டும் என, அழைப்பு விடுத்தார்.
புதிய கட்சி அறிவிப்பு : இரு தினங்களுக்கு முன், வெளிநாடு சென்று உள்ள தொழிலதிபர் ஒருவரிடம், ரஜினி தொலைபேசியில் பேசியுள்ளார். அப்போது, தன் கட்சிக் கொடியையும், அதில் இடம்பெறும், லோகோவையும் தெரிவித்துள்ளார். ஆக., 15ல், சுதந்திர தினத்தன்று, புதிய கட்சியின் அறிவிப்பை, அவர் வெளியிடத் திட்டமிட்டுள்ளார் .
இதுகுறித்து, தனக்கு நெருக்கமான பத்திரிகை ஆசிரியரிடமும், ஆலோசனை நடத்தியுள்ளார். இதற்கிடையில், நடிகர், நடிகையரும், ரஜினியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர்களில், நடிகைகள் மீனாவும், நமீதாவும், ரஜினி கட்சியில் சேர தயாராக இருப்பதாகத் தெரியவந்துள்ளது.
மேலும், ரஜினி கட்சி துவங்கினால், அதில் இணைவதற்கு, அ.தி.மு.க., முக்கிய புள்ளிகளும், துாது விடுவதாக தகவல் வெளியாகி உள்ளது. தி.மு.க., காங்கிரஸ், த.மா.கா.,வை சேர்ந்த மாநில, மாவட்ட நிர்வாகிகளும், ரஜினி கட்சிக்கு தாவலாம் என, கூறப்படுகிறது.
- நமது நிருபர் -