இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
நடிகர் தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் மற்றும் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணுவின் 'வி' கிரியேஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் - வேலையில்லா பட்டதாரி-2. இப்படத்தில் தனுஷ் ஜோடியாக அமலாபால் நடிக்கிறார்.
பாலிவுட் நடிகை கஜோல் நெகட்டிவ்வான கேரக்டரில் நடித்திருக்கும் இப்படத்தில், விவேக், சமுத்திரக்கனி, சரண்யா பொன்வண்ணன், ரிஷிகேஷ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். வேலையில்லா பட்டதாரி-2 படத்தின் படிப்பிடிப்பு முடிந்து, தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது.
தனுஷின் பிறந்தநாளான ஜுலை 28-ஆம் தேதி படம் வெளியாகவிருப்பதை முன்னிட்டு படத்தை விளம்பரப்படுத்துவதில் இப்படத்தின் இயக்குநர் சவுந்தர்யா ரஜினிகாந்த் புதிய முயற்சி ஒன்றினை மேற்கொண்டிருக்கிறார்.
அதாவது, திரைப்படத்தின் புரமோஷனுக்காக தனுஷ், கஜோல் இணைந்து நடித்துள்ள ஒரு பாடல் காட்சியை சமீபத்தில் மும்பையில் படமாக்கியுள்ளார். இந்த புரமோஷன் வீடியோவை யுடியூப் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிட்டு வேலையில்லா பட்டதாரி-2 படத்தை விளம்பரப்படுத்த முடிவு செய்துள்ளனர்.