‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
வசீகர அழகாலும், திறமையான நடிப்பாலும் கவர்ந்த நடிகை ஸ்ரீதேவி, சினிமா துறையில் காலூண்றி 50 வருடங்கள் ஆகின்றது. 1967ம் வருடம் ஜூலை 7ம் நாள் துணைவன் என்ற படத்தின் மூலமாகக் குழுந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பிரபலமான நடிகையாக திகழ்ந்தார். தற்போது வயதுக்கு ஏற்றபடியான கதைகளில் நடித்து வருகிறார். ஸ்ரீதேவி நடிப்பில் உருவாகி உள்ள படம் மாம். இது இவரது 300வது படமாக ரிலீஸாக உள்ளது.
ஸ்ரீதேவியின் 50 ஆண்டு சாதனையைக் கொண்டாடும் விதமாக இப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகை ஸ்ரீதேவியின் கணவருமான போனி கப்பூர் "மாம்" படத்தை ஜுலை 7, 2017 அன்று வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் இப்படத்தின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என அனைத்து பதிப்புகளிலும் நடிகை ஸ்ரீதேவி டப்பிங்கில் பேசுவுள்ளதாகப் படக்குழுவினரால் கூறப்படுகிறது.
"மாம்" திரைப்படத்தை ஜீ ஸ்டூடியோஸ், போனி கபூர் இணைந்து வழங்க a Mad Films & Third Eye Productions தயாரித்துள்ளனர். இப்படத்தை ரவி உத்யவார் இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.