வீர தீர சூரனாக மாறிய விக்ரம் | அஜித் பிறந்தநாளில் 'விடாமுயற்சி' அப்டேட்? | ஷங்கரின் மருமகன் யார் தெரியுமா...! | சென்னை வெள்ளத்தை அடிப்படையாக கொண்ட குறும்படத்திற்கு துபாயில் விருது | சரியான நேரத்தில் சரியானதை செய்துள்ளேன் - வித்யா பாலன் | தனுஷின் குபேரா டைட்டிலுக்கு திடீர் சிக்கல் | கடும் உடற்பயிற்சியில் இறங்கிய ஐஸ்வர்யா ரஜினி | விக்ரம் பிறந்தநாளில் வெளியான தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ | மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மன்சூர் அலிகான் | துவாரகீஷின் 'நான் அடிமை இல்லை' - மறக்க முடியுமா ? |
ஒருநாள்கூத்து படத்தில் அறிமுகமானவர் நிவேதா பெத்துராஜ். தமிழ்நாட்டு பெண் என்றாலும் சிங்கப்பூரில் படித்து வளர்ந்தவர். அந்த படத்தைத் தொடர்ந்து உதயநிதியுடன் பொதுவாக என் மனசு தங்கம் படத்தில் நடித்த நிவேதா, தற்போது ஜெயம் ரவியுடன் டிக் டிக் டிக் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த மூன்று படங்களிலுமே கிளாமர் இல்லாமல் குடும்பப்பாங்கான வேடங்களில் தான் நடித்துள்ளார் நிவேதா பெத்துராஜ். அதனால் அவர் மீது குடும்ப நடிகை என்கிற இமேஜ்தான் ஒட்டிக்கொண்டுள்ளது.
ஆனால், இந்த நேரத்தில் தற்போது நிவேதா பெத்துராஜின் கவர்ச்சிகரமான புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகியிருக்கிறது. அதையடுத்து, இந்த அளவுக்கு எந்த படத்தில் நிவேதா கிளாமராக நடித்திருக்கிறார் என்று பலரும் ஆராயத் தொடங்கியிருக்கிறார்கள்.