'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
நடிகர் சூஷந்த் சிங் ராஜ்புட் அடுத்து நடிக்க இருக்கும் படம் சந்தமாமா டோர் கி . சஞ்சய் புரான்சிங் சவ்கான் டைரக்ட் செய்யும் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தில் சூஷந்த்துடன் நவாசுதீன் சித்திக், மாதவன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.
இப்படத்தில் நடிப்பதற்கு தன்னை தயார்படுத்திக் கொள்வதற்காக நாசா செல்கிறாராம் சூஷந்த். இத்தவலை அவர் உறுதியும் செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இது மிகவும் கவுரவமான விஷயம் எனக்கு. எனது இன்ஜினியர் நண்பர்கள் பலருக்கும் கிடைக்காத நாசாவிற்கு செல்லும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. எனக்கு அறிவியல் சார்ந்த புனைக்கதையில் உருவான படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
அத்தகைய படங்கள் எப்போதும் என்னை ஈர்க்கக் கூடியவை. அந்த வகையில் இப்படம் என் மனதிற்கு மிகவும் நெருக்கமான படம். விண்வெளி ஆய்வாளர்களுடன் வாழும் வாய்ப்பை இப்படம் எனக்கு தந்துள்ளது என தெரிவித்துள்ளார்.