'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
பாலிவுட்டின் துணிச்சலான, திறமையான நடிகை என புகழப்படுபவர் நடிகை கங்கனா ரனாவத். இவர் தற்போது சிம்ரன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்ட செப்டம்பர் 15ம் தேதி ரிலீசாக உள்ளது. இப்படத்தை ஹன்சல் மேத்தா இயக்குகிறார்.
இந்த படத்தை முடித்த பிறகு தேஜூ படத்தின் மூலம் தான் இயக்குனராக அறிமுகம் ஆக உள்ளதாக கங்கனா தெரிவித்துள்ளார். மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய கங்கனா, இந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் தேஜூ படத்தின் வேலைகள் துவக்கப்பட உள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு ரிலீசாக உள்ளது. இப்படத்தில் முதல் முறையாக நான் 80 வயது பெண்ணாக நடிக்க உள்ளேன்.
இது முழுக்க முழுக்க முதியவர்களை பற்றிய படம். இப்படத்தில் தன் வயதை பற்றி கவலைப்படாமல் சுறுசுறுப்புடனும், துடிப்புடனும் இருக்கும் பெண்ணாக நான் நடித்துள்ளேன் என தெரிவித்துள்ளார். கங்கனாவின் மனிகர்னிகா பிலிம்ஸ் வழங்கும் இப்படத்தை ஷைலேஷ் சிங் தயாரிக்க உள்ளார்.