தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
இந்தியத் திரைப்படங்களுக்கென சீனாவில் கடந்த சில வருடங்களாக நல்ல மார்க்கெட் கிடைத்து வருகிறது. ஆமீர்கான் நடித்து வெளிவந்த '3 இடியட்ஸ், பிகே' ஆகிய படங்களுக்கு அங்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. குறிப்பிட்ட வசூலும் கிடைத்தது. ஆனால், இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளிவந்த ஆமீர்கானின் 'தங்கல்' படம் முந்தைய இந்தியப் படங்களின் சாதனைகளை முறியடித்து 500 கோடி ரூபாயைக் கடந்து புதிய சாதனயைப் படைத்துள்ளது.
ஹாலிவுட் அல்லாத மற்ற வெளிநாட்டுப் படங்களில் 'தங்கல்' படம் புதிய சாதனையைப் படைத்து நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது. இதற்கு முந்தைய சாதனையாக ஜப்பான் மொழிப் படமான 'யுவர் நேம்' என்ற படம் 575.87 மில்லியன் யென் வசூலித்ததுதான் சாதனையாக இருந்ததாம். அந்த சாதனையை 'தங்கல்' படம் முறியடித்து, அந்த வசூலை தற்போது கடந்துள்ளது.
மேலும் சீனாவைப் பொறுத்தவரையில் திரைப்படங்களை அது திரையிடப்படும் காட்சிகளை வைத்துதான் கணக்கில் கொள்வார்களாம். அங்கு தியேட்டர்களின் எண்ணிக்கையை கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டார்களாம். அந்த விதத்தில் 'தங்கல்' படம் சுமார் 30 ஆயிரம் காட்சிகளுடன் ஆரம்பமான இப்படம் தற்போது 68 ஆயிரம் காட்சிகளுடன் நடந்து கொண்டிருக்கிறதாம். மேலும் 11 மில்லியன் மக்கள் இதுவரை படத்தைப் பார்த்திருக்கிறார்களாம்.
அதோடு, சீனாவில் உள்ள சமூக வலைத்தளமான 'வீபோ'வில் ஆமீர்கானைத் தொடர்பவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தைக் கடந்துள்ளது. இந்தியப் பிரபலம் ஒருவர் அவ்வளவு தொடர்பாளர்களைப் பெறுவது இதுவே முதல் முறையாம்.
'தங்கல்' படத்தின் வசூல் சீனாவில் 500 கோடியைக் கடந்தாலும் 'பாகுபலி 2' படம் சீனாவில் வெளியானாலும் அவ்வளவு வசூலைக் கடக்க முடியாது என்கிறார்கள். 'பாகுபலி' படத்தின் முதல் பாகம் சீனாவில் பெரிய வரவேற்பை பெறவில்லை. இரண்டாம் பாகம் அதன் தொடர்ச்சிதான் என்பதால் சீன ரசிகர்கள் படத்தைப் பார்க்க ஆர்வம் காட்ட வாய்ப்பில்லை. அதே சமயம் சீனாவில் மிகப் பெரும் அளவில் விளம்பரம் செய்தால் மட்டுமே 'பாகுபலி 2' படம் அங்கு வரவேற்பைப் பெற முடியும் என்கிறார்கள்.
சீன வசூலையும் சேர்த்தால் 'தங்கல்' படம் 'பாகுபலி 2'வின் வசூலை கொஞ்சம் கொஞ்சமாக நெருங்கி வருகிறது.