தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் | ஸ்டார் படம் ரிலீஸ் பற்றி கவின் வெளியிட்ட தகவல் | 'அரண்மனை 4' வெளியீடு தள்ளிவைப்பு | 600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! |
ஹாலிவுட்டின் பிரபல நடிகர் ஜானி டெப். பைரேட்ஸ் ஆப் தி கரிபீயன் படங்களின் மூலம் உலகம் முழுக்க புகழ் பெற்றவர். தற்போது பைரேட்ஸ் ஆப் தி கரிபீயன்-5 உருவாகி உள்ளது. இதிலும் கேப்டன் ஜாக் ஸ்பேரோ என்ற ரோலில் நடித்திருக்கிறார் ஜானி டெப். பைரேட்ஸ் ஆப் தி கரிபீயன்-5 படம் இந்தியாவிலும் ஹிந்தி, தமிழ் உள்ளிட்ட சில மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டு ரிலீஸ் செய்யப்பட இருக்கின்றன. இதனிடையே ஹிந்தியில் டப்பாகும் இப்படத்தில் ஜானி டெப் குரலுக்கு பிரபல பாலிவுட் நடிகர் அர்ஷத் வர்ஷி குரல் கொடுத்திருக்கிறார்.
இதுகுறித்து அர்ஷத் வர்சி கூறியிருப்பதாவது... "ஜானி டெப்பின் குரலுக்கு டப்பிங் பேசியது மிகவும் சவாலாக இருந்தது. குறிப்பாக அவர் குடிக்கும் காட்சியிலும், குடித்து கொண்டே பேசும் காட்சியிலும் டப்பிங் பேசுவது சிரமமாக இருந்தது. இருந்தாலும் எல்லாவற்றையும் சமாளித்து டப்பிங் பேசியுள்ளேன். இது எனக்கு நல்லதொரு வாய்ப்பாக அமைந்தது, மகழ்ச்சி" என்றார்.
அர்ஷத் வர்ஷி, தற்போது கோல்மால் அகைன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார்.