'கில்லி' எத்தனை மொழிகளில் ரீமேக் ஆனது தெரியுமா ? | குருவாயூரில் நடந்த 'டாடா' நாயகி அபர்ணா தாஸ் திருமணம் | பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் |
உலகத் திரைப்பட விழாக்களில் முக்கியமான விழாக்களில் ஒன்றாக பிரான்ஸ் நாட்டில் உள்ள கேன்ஸ் நகரில் நடக்கும் திரைப்பட விழாவும் இருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள திரைப்படங்களும், கலைஞர்களும் கலந்து கொள்ளும் இந்த விழாவில் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியப் படங்களும், இந்தியக் கலைஞர்களும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.
15 வருடங்களுக்கு முன்பு 2002ம் ஆண்டு நடைபெற்ற விழாவில் 'தேவதாஸ்' படத்தின் பிரிமீயர் காட்சிக்காக முதல் முறையாக கலந்து கொண்டார் ஐஸ்வர்யா ராய். அதன்பின் ஒவ்வொரு ஆண்டும் அவருடைய ரெட் கார்ப்பெட் நடைக்காக மீடியாக்களின் புகைப்படக் கலைஞர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். வேறு எந்த ஒரு இந்திய நடிகைக்கும் கிடைக்காத புகழ் ஐஸ்வர்யா ராய்க்கு இந்த விழாவில் கிடைத்து வருகிறது. அவர் எந்த ஆடையில் வருவார், எந்த ஹேர்ஸ்டைலில் வருவார் என இந்திய நடிகைகளும் பொறாமைப்படும் அளவிற்குக் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
திருமணம் முடிந்து குழந்தை பெற்ற பின்னரும் ஐஸ்வர்யாவுக்கு அங்கு கிடைத்து வரும் வரவேற்பு பலருக்கும் ஆச்சரியமாகவே உள்ளது. இந்த 43 வயதிலும் சிறிதும் அழகு குறையாமல் அவர் இந்த ஆண்டிலும் 'ரெட் கார்ப்பெட்,'டில் அசத்தல் நடை போட்டதைப் பார்த்து வியந்தவர்கள் அதிகம். இந்தாண்டு அவர் சிண்ட்ரலா உடையில் வந்து பார்வையாளர்களை அசத்தினார்.