Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரூ.1500 கோடியைக் கடந்தது பாகுபலி 2 வசூல்

19 மே, 2017 - 12:45 IST
எழுத்தின் அளவு:
Bahubali-2-collection-reached-to-Rs.1500-crore

பாகுபலி 2 படம் மூன்று வாரங்களுக்கு முன்பு ஏப்ரல் 28ம் தேதி உலகம் முழுவதும் வெளிவந்தது. படம் வெளியான நாளில் இருந்து ஒவ்வொரு நாளும் வசூலில் பல புதுப்புது சாதனைகளை இந்தப் படம் படைத்துக் கொண்டே வந்தது.


நேற்றுடன் முடிவடைந்த மூன்று வார நாட்களில் இப்படம் 1500 கோடி ரூபாய் வசூலைத் தாண்டியுள்ளதாக படக்குழு சார்பிலேயே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று வரை இப்படம் இந்தியாவில் 1225 கோடியும், வெளிநாடுகளில் 275 கோடி ரூபாயும் வசூலித்துள்ளது என்று வியாபார வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மூன்று வாரம் முடிந்த பின்னும் இன்னும் பல ஊர்களில் இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு நடந்து கொண்டுதான் இருக்கிறது. பெரிய மாநகரங்கள், மாநகரங்கள், மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் விடுமுறை நாட்களில் படத்திற்கு முன்பதிவு பரபரப்பாகவே உள்ளது.


இதுவரை எந்த ஒரு இந்தியத் திரைப்படமும் வசூலிக்காத ஒரு தொகையை பாகுபலி 2 வசூலித்துள்ளது. 1500 கோடியைக் கடந்துள்ள நிலையில் இன்னும் ஓரிரு வாரங்கள் இப்படம் ஓடினால் 2000 கோடியைத் தொடவும் வாய்ப்புள்ளது.


Advertisement
கிளாமர் ஹீரோயினாக விரும்பவில்லை - ரெஜினாகிளாமர் ஹீரோயினாக விரும்பவில்லை - ... கன்னடர்களை வம்புக்கிழுக்கும் ராம்கோபால் வர்மா கன்னடர்களை வம்புக்கிழுக்கும் ...


வாசகர் கருத்து (1)

Suman - Mayiladuthurai ,இந்தியா
20 மே, 2017 - 01:59 Report Abuse
Suman சினிமாவில் தொழிலில் தன் கும்பத்தோடு சேர்ந்து ஒரு இந்திய சாதனை செய்து இருக்கிறார். இயக்குனர் ராஜ மௌலி குடும்பத்திற்கு வாழ்த்துக்கள்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film sketch
    • ஸ்கெட்ச்
    • நடிகர் : விக்ரம்
    • நடிகை : தமன்னா
    • இயக்குனர் :விஜயசந்தர்
    Tamil New Film Karuppan
    • கருப்பன்
    • நடிகர் : விஜய் சேதுபதி
    • நடிகை : தன்யா ரவிச்சந்திரன்
    • இயக்குனர் :பன்னீர்செல்வம்
    Tamil New Film Theeran Adhigaram Ondru
    Tamil New Film Nadodi Kanavu
    • நாடோடி கனவு
    • நடிகர் : மகேந்திரன்
    • நடிகை : சுப்ரஜா
    • இயக்குனர் :வீரசெல்வா

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in