பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா நடித்த 100வது படம் கெளதமிபுத்ரா சட்டகர்னி. கிரீஷ் இயக்கிய அந்த படத்தைத் தொடர்ந்து பூரி ஜகன்னாத் இயக்கும் 101-வது படத்தில் தற்போது நடித்து வருகிறார் பாலகிருஷ்ணா. இந்த படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்திலுள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து வந்ததை அடுத்து தற்போது பாடல் மற்றும் சண்டை காட்சிகளுக்காக போர்ச்சுக்கல் நாட்டில் முகாமிட்டுள்ளனர்.
மேலும், கேங்ஸ்டர் கதையில் உருவாகி வரும் இந்த படத்தில் ரிஸ்க்கான சண்டை காட்சிகளில் நடித்து வரும் பாலகிருஷ்ணாவுக்கு ஒரு ஹாலிவுட் பைட் மாஸ்டர் பயற்சி கொடுத்து வருகிறாராம். அதோடு, பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார். இந்த படத்திற்கு முஸ்தாத் என்று டைட்டில் வைக்க பரிசீலித்து வருகிறார் இயக்குனர் பூரி ஜகன்னாத். பாலகிருஷ்ணா பிறந்தநாளில் பர்ஸ்ட் லுக் போஸ்டரும், செப்டம்பரில் படத்தை ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.