Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மரக்கன்றுகளை நட்டு மோகன்லால் பட ஷூட்டிங் துவக்கம்..!

18 மே,2017 - 17:20 IST
எழுத்தின் அளவு:

கிட்டத்தட்ட 21 வருட கனவு இன்றுதான் நனவாகி இருக்கிறது மலையாள இயக்குனர் லால் ஜோசிற்கு.. ஆம்.. 1998ல் மம்முட்டி நடித்த ஒரு மருவத்தூர் கனவு' படத்தை இயக்கியபின் அடுத்தது எப்போது மோகன்லால் படத்தை இயக்கப்போகிறார் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாகவும் இருந்தது.. இத்தனைக்கும் லால்ஜோசின் குருவான இயக்குனர் கமல் இயக்கிய 'விஷ்ணுலோகம்' படத்தில் அசிஸ்டன்ட் டைரக்டராக பணியாற்றிய லால்ஜோசை பார்த்து இவர் மிகப்பெரிய இயக்குனராக வருவார் என ஆருடம் சொன்னவர்தான் மோகன்லால்.. சொன்னபடியே பெரிய ஆளாக வளர்ந்தும் விட்டார் லால் ஜோஸ்.


ஆனால் ஏனோ தெரியவில்லை இத்தனை நாட்களாக இந்த கூட்டணி ஏனோ சில காரணங்களால் ஒன்று சேரவே முடியாமல் போனது. தற்போது இருவருக்கும் இடையேயான பனித்திரை விலகி, இதோ மோகன்லால் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை இன்று துவக்கியும் விட்டார் லால் ஜோஸ். கேரளாவில் தும்பாவில் உள்ள செயின்ட் சேவியர் கல்லூரியில் தான் படப்பிடிப்பு நடைபெறுகிறது.. இதன் துவக்க நாளான இன்று கல்லூரி முழுவதும் நிறைய மரக்கன்றுகளை நட்டுவைத்து படப்பிடிப்பை துவங்கியுள்ளனர். இந்தப்படத்தில் மோகன்லால் கல்லூரி ஒன்றின் வைஸ்பிரின்சிபாலாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் 'கம்மட்டிப்பாடம்' படத்துக்கு விருது..!நியூயார்க் இந்திய திரைப்பட விழாவில் ... ஜாலி எல்எல்பி-2 : வெங்கடேஷ்க்கு பதில் பவன் கல்யாண் ஜாலி எல்எல்பி-2 : வெங்கடேஷ்க்கு பதில் ...


வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film bongu
    • போங்கு
    • நடிகர் : நட்ராஜ்
    • நடிகை : ருகி சிங்
    • இயக்குனர் :தாஜ்
    Tamil New Film Yang Mang Chang
    • யங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film odi odi ulaikanum
    Tamil New Film Geminiganesanum Surulirajanum

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in