'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா | தேர்தலுக்கு பின் விடாமுயற்சி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு | ராபின் ஹூட் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு |
கடந்த சில மாதங்களுக்கு முன் துல்கர் சல்மான் நடிப்பில் ராஜீவ் ரவி டைரக்சனில் 'கம்மட்டி பாடம்' என்கிற பாடம் வெளியானது. ஒரு கேங்க்ஸ்டர் பாணி படமாக உருவாகி இருந்த இந்தப்படம் விமர்சனம் ரீதியாக பராட்டப்பட்டதுடன் பலதரப்பட்ட விருதுகளையும் வாரி குவித்தது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த நியூயார்க்-இந்திய திரைப்பட விழாவில் கலந்துகொண்ட இந்த 'கம்மட்டிப்பாடம்' படம் சிறந்த திரைக்கதைக்கான விருதை பெற்றுள்ளது.
இந்த தகவலை படத்தின் இயக்குனர் ராஜீவ் ரவியின் மனைவியும் நடிகையுமான கீது மோகன்தாஸ் தெரிவித்துள்ளார். இந்தப்படத்தை ஒளிப்பதிவாளர் ராஜீவ் ரவி இயக்கி இருந்தாலும் படத்தின் திரைக்கதையை எழுதியது மலையாள கதாசிரியரும் குணச்சித்திர நடிகருமான பி.பாலச்சந்திரன் தான். ஆம் 65 வயதான இவர் 30 வயதான துல்கர் சல்மான் படத்திற்கு கதை எழுதி இந்த விருதை கைப்பற்றியுள்ளார் என்பதுதான் ஆச்சர்யம்.