பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் | ஏழு தோல்வி படங்களுக்குப் பிறகு ஏப்., 26ல் வெற்றியை ருசிப்பாரா திலீப் ? | சொத்து மதிப்பை வெளியிட்ட பவன் கல்யாண் | மஞ்சும்மேல் பாய்ஸ் தயாரிப்பாளர்களின் மீது வழக்கு பதிவு | ரஜினியை சந்தித்து ஆசி பெற்ற சாய் தன்ஷிகா பட ஹீரோ | ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது |
தோனி படத்தின் மூலம் பிரபலமான நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட், தற்போது ராப்தா உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகிறார். சுஷாந்த், சினிமாவிற்கு வருவதற்கு முன், முன்னணி சேனல் ஒன்றில் இடம்பெற்ற டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று, டிவி நடிகை அங்கிதா லோக்காந்தேவுடன் நடனம் ஆடினார். அப்போதே இருவரை பற்றியும் கிசுகிசுக்கள் எழுந்தன. இந்நிலையில், சமீபத்தில் சுஷாந்த் சிங்கும், அங்கிதாவும் காபி ஷாப் ஒன்றில் சந்தித்து பேசியதாகவும், இருவரும் டேட்டிங் போவதாகவும் செய்திகள் வெளியாகின. ஆனால் இதை மறுத்துள்ளார் சுஷாந்த்.
சில தினங்களுக்கு முன்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த சுஷாந்த் சிங்கிடம், அங்கிதா பற்றிய கேள்வி முன்வைக்கப்பட்ட போது, அதற்கு பதிலளித்த சுஷாந்த், "நான் அங்கிதாவை பார்க்கவே இல்லை. நான் அவரை சந்தித்து ஒரு வருடங்களுக்கு மேலாகிவிட்டது. அப்படியிருக்கையில் எங்கிருந்து இதுபோன்று செய்திகள் வருகின்றன என்று தெரியவில்லை. நான் யாரையும் டேட்டிங் செய்யவில்லை, நான் தனியாக இருப்பதே மகிழ்ச்சி, மேலும் தற்போது நான் இருக்கும் பிஸியான நேரத்தில் அதற்கெல்லாம் நேரமும் இல்லை, ரொமான்ஸ் செய்ய என்னிடம் எனர்ஜியும் இல்லை" என்று கூறினார்.