ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
ஒரு படம் வெற்றி பெற்றுவிட்டால் அதன் இரண்டாம் பாகம் உருவாவது சகஜமாகிவிட்டது. அந்தவகையில் சில ஆண்டுகளுக்கு முன்னர் சல்மான் கான் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற நோ என்ட்ரி படத்தின் இரண்டாம் பாகம் அடுத்து உருவாக இருக்கிறது. போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்தில் சல்மான் கானே நடிப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், தற்போது சல்மானுக்கு பதிலாக ஹிருத்திக் ரோஷன் நோ என்ட்ரி-2 படத்தில் நடிப்பதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. ஆனால் இதை போனி கபூர் மறுத்துள்ளார்.
இதுகுறித்து போனி கபூர் கூறியிருப்பதாவது... "விரைவில் சல்மான் கானை சந்தித்து நோ என்ட்ரி-2 படம் தொடர்பாக பேச உள்ளேன். ஒருவேளை சல்மான் நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டால் வேறு நடிகரை நடிக்க வைக்க யோசிப்பேன். மற்றபடி சல்மான்கானுக்கு பதிலாக ஹிருத்திக் ரோஷன் நடிப்பதாக வந்த செய்தி முற்றிலும் தவறானது, அவர் நடிக்கவில்லை" என்றார்.
நோ என்ட்ரி-2 படத்தையும் அனீஸ் பாஸ்மியே இயக்க உள்ளார். முதல்பாகத்தில் நடித்த அனில் கபூர், இரண்டாம் பாகத்திலும் நடிக்க உள்ளார். சல்மான் நடிக்கிறாரா... இல்லையா...? என்பது முடிவானதும் மற்ற அறிவிப்புகள் வெளியாகும்.