பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
நடிகை பிரியங்கா சோப்ரா, மற்றொரு ஹாலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளாராம். இப்படத்திற்கு ஏ கிட் லைக் ஜாக் என பெயரிடப்பட்டுள்ளது. பால் பெர்னான் இப்படத்தை தயாரிக்கிறார்.
இவரது படத்தில் நடிக்க பிரியங்கா சோப்ரா ஒப்பந்தமாகி உள்ள தகவலை பெர்னான் தனது டுவிட்டர் பக்கத்தின் மூலம் தெரிவித்துள்ளார். இப்படத்தில் நடிப்பதற்கு பிரியங்கா தான் பொருத்தமாக இருப்பார் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.
ஹாலிவுட் படமான ஏ கிட் லைக் ஜாக் படத்தில் பிரியங்கா சோப்ராவுடன் ஜிம் பார்சன்ஸ், கிளாரி டேனிஸ், ஆக்டேவியா ஆகியோரும் நடிக்க உள்ளனர். ஜாக் என்ற 4 வயது குழந்தை மற்றும் அதன் பெற்றோரை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் அப்பெற்றோரின் நண்பராக பிரியங்கா நடித்துள்ளார். கணவனை பிரிந்து வாழும் தாயாக, அமல் என்ற வேடத்தில் பிரியங்கா நடிக்கிறாராம்.
இப்படத்தின் பணிகளை துவங்குவதற்கு முன்னதாக பேவாட்ச் என்ற படத்தில் பிரியங்கா நடித்து வருகிறார். இப்படம் இந்த ஆண்டு ஜூன் 2 ம் தேதி ரிலீசாக உள்ளது.