Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

250 கோடி ரூபாய் செலவில் சத்ரபதி சிவாஜி படம்

13 மே, 2017 - 14:45 IST
எழுத்தின் அளவு:
Sathrapathi-sivaji-biopic-to-be-cinema-in-Rs.250-crore-budget

இந்திய வரலாற்றில் மராட்டிய மாமன்னரான சிவாஜி பற்றி பலரும் பள்ளிக் கூடங்களில் படித்திருப்பார்கள். வட இந்தியாவைப் பொறுத்தவரையில், அதிலும் மராத்தியைப் பொறுத்தவரையில் சிவாஜி அந்த மாநிலத்தின் தனிப் பெரும் அடையாளம். அவருடைய வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க வேண்டும் என ஹிந்தி நடிகரான ரித்தேஷ் தேஷ்முக் கடந்த சில ஆண்டுகளாகவே முயற்சித்து வந்தார். ஆனால், சில காரணங்களால் அது தள்ளிக் கொண்டே போனது. தற்போது 250 கோடி ரூபாய் செலவில் அவரே தயாரித்து நடிக்க முடிவு செய்துள்ளாராம்.


மாராட்டிய மாநில முன்னாள் முதல்வரான விலாஸ்ராவ் தேஷ்முக்-கின் மகன்தான் ரித்தேஷ் தேஷ்முக். தமிழில் சச்சின், சென்னைக் காதல், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் ஆகிய படங்களில் நாயகியாக நடித்த ஜெனிலியாவின் காதல் கணவர்.


பாகுபலி 2 படம் தந்த மாபெரும் வெற்றியும், வசூலும் பல சரித்திரக் கதைகளை எடுக்க தூண்டுகோலாகி வருகிறது. ஏற்கெனவே, மலையாளத்தில் 1000 கோடி செலவில் ரண்டமூழம், தெலுங்கு, ஹிந்தியில் 500 கோடி செலவில் ராமாயணம், தமிழில் 300 கோடி ரூபாய் செலவில் சங்கமித்ரா எடுக்கப் போவதாக அறிவிப்புகள் வந்துள்ளன. இப்போது அந்த வரிசையில் சத்ரபதி சிவாஜி படமும் சேர்ந்துள்ளது. இந்தப் படத்தை மராத்தி மற்றும் ஹிந்தியில் எடுக்க உள்ளதாகத் தகவல்.


இப்படம் மூலம் தங்கள் குடும்பத்தினரின் அரசியல் ஈடுபாட்டிற்கும் ஆதரவு அதிகரிக்கும் என ரித்தேஷ் தேஷ்முக் நினைக்கிறாராம்.


Advertisement
கணவரை விவாகரத்து செய்தார் மலைக்கா அரோராகணவரை விவாகரத்து செய்தார் மலைக்கா ... நிஜத்தில் ஹீரோவான விவேகம் வில்லன் நிஜத்தில் ஹீரோவான விவேகம் வில்லன்


வாசகர் கருத்து (4)

Sundar Rajan - chennai,மாலத்தீவு
14 மே, 2017 - 09:15 Report Abuse
Sundar Rajan நிச்சயம் மிகப்பெரும் வெற்றி.... நிகழ்கால மஹாபாரதத்தைப்போல் இருக்கும் ..
Rate this:
VELAN S - Chennai,இந்தியா
13 மே, 2017 - 21:02 Report Abuse
VELAN S பேசாமே இந்த 250 கோடில , 50 கோடியை தானம் பண்ணிவிட்டு மீதி 200 கோடியை பாங்கிலே போட்டு வட்டியை வைத்து காலம் முழுவதும் சாப்பிடற வழிய பாரப்பா , சொன்னா கேட்க மாட்டியே , காசை விட்டு விட்டு மாட்டிகிட்டு முழிக்கும்போது தெரியும் .
Rate this:
YesJay - Chennai,இந்தியா
13 மே, 2017 - 19:56 Report Abuse
YesJay Ranveer Singh will be a better fit for this role.
Rate this:
appaavi - aandipatti,இந்தியா
13 மே, 2017 - 17:48 Report Abuse
appaavi எல்லாம் ஊத்த போவது உறுதி...இப்படித்தான் பேய், பிசாசுகளை காலி செய்தார்கள்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
OR )Login with
New to Dinamalar ?
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Devil Night Dawn of the Nain Rouge
    Tamil New Film Oru Kathai Sollatuma
    Tamil New Film Billa Pandi
    • பில்லா பாண்டி
    • நடிகர் : ஆர் கே சுரேஷ்
    • நடிகை : சாந்தினி
    • இயக்குனர் :சரவண சக்தி
    Tamil New Film Velaikkaran
    • வேலைக்காரன்
    • நடிகர் : சிவகார்த்திகேயன்
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :ஜெயம் ராஜா

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2017 Dinamalar , No.1 Tamil website in the world. All rights reserved. Mail as Your Suggestion to webmaster@dinamalar.in