ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது | விக்ரமின் 'வீர தீர சூரன்' படப்பிடிப்பு இன்று துவங்கியது | 'கல்கி 2898 ஏடி' : ஒவ்வொருவருக்கும் இவ்வளவு சம்பளமா ? | பஹத் பாசில் படத்தை ஒருபோதும் மிஸ் பண்ணாதீர்கள் : சமந்தா | போதை ஆசாமிகளின் தாக்குதலுக்கு ஆளானேன் : உறுமீன் இயக்குனர் அதிர்ச்சி தகவல் |
பாலிவுட்டில் முன்னணி நடிகர்களாக வலம் வந்தவர்கள் அமிதாப் பச்சன் மற்றும் ரிஷி கபூர். தற்போது இருவருக்கும் வயதாகிவிட்டதால் வயதுக்கு ஏற்ற ரோலில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இப்போது இருவரும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளனர், அதுவும் அப்பா-மகனாக நடிக்கின்றனர். படத்திற்கு 102 நாட் அவுட் என்று பெயர் வைத்திருக்கிறார்கள். உமேஷ் சுக்லா இயக்குகிறார், குஜராத்தி மொழியில் வெளியான 102 நாட் அவுட் படத்தின் தழுவல் தான் இது. இதில் 102 வயது முதியவராக அமிதாப் நடிக்க, அவரது 75 வயது மகனாக ரிஷி கபூர் நடிக்க இருக்கிறார். 102 வயதான அப்பாவுக்கும், 75 வயதான மகனுக்கும் இடையேயான பாசப்போராட்டம் தான் படத்தின் கதை. விரைவில் படப்பிடிப்பு ஆரம்பமாக இருக்கிறது.