‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
எதிர்பார்த்த பாகுபலி-2 படம் நேற்று உலகம் முழுக்க ரிலீஸாகிவிட்டது. ஒட்டுமொத்த இந்தியத் திரையுலமும் இப்படத்தை பாராட்டி வருகிறார்கள். பாகுபலி-2 படத்தின் பிரமாண்டத்தை ரசிகர்கள் வியந்து பாராட்டியுள்ளனர். மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டும் படமாக பாகுபலி-2 இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதுமட்டுமல்ல படத்தின் முதல்நாள் வசூலும் இந்திய சினிமா வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. உலகம் முழுக்க சுமார் 8000 தியேட்டர்களில் வெளியாகியுள்ள பாகுபலி-2 படம் நிச்சயம் ரூ.100 கோடியை தாண்டிய வசூலை ஈட்டியிருக்கும் என்கிறார்கள்.
இதற்கிடையே பாகுபலி-2, ஹிந்தியில் மட்டும் ஒரேநாளில் ரூ.41.5 கோடி வசூலித்திருக்கிறது. இது சல்மானின் சுல்தான்(ரூ.36.54 கோடி) மற்றும் அமீர்கானின் தங்கல்(ரூ.29.78கோடி) படங்களின் வசூலை விட அதிகமாகும். பாகுபலி முதல்பாகம், முதல்நாளில் ரூ.5.15 கோடி தான் வசூலித்திருந்தது. இப்போது அதைவிட பலமடங்கு வசூலை குவித்து இருப்பது ஹிந்தி திரையுலகினர் இடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருப்பதுடன் பாகுபலி-2 வசூலை பார்த்து கான் நடிகர்களே வாயடைத்து போய் உள்ளனர்.