ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் |
சாகேத் சவுத்ரி இயக்கத்தில் இர்பான் கான், பாகிஸ்தான் நடிகை சபா ஓமர் ஆகியோர் முதன்மை ரோலில் நடித்துள்ள படம் ஹிந்தி மீடியம். இப்படத்தின் ஷூட்டிங் எல்லாம் முடிந்து ரிலீஸ்க்கு தயாராகிவிட்டது. வருகிற மே 12-ம் தேதி படம் வெளியாக இருப்பதால் படக்குழுவினர் புரொமோஷன் வேலைகளை துவங்கியுள்ளனர். ஆனால் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே சுமூகமான உறவு இல்லாததால் பாகிஸ்தான் நடிகை, இங்கு வந்து புரொமோஷன் செய்வதிலும், இந்திய படங்கள் அங்கு ரிலீஸாவதிலும் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.
இந்நிலையில் இப்படத்தில் நடித்துள்ள இர்பான் கான், நடிகை சபா ஓமரும் புரொமோஷனில் பங்கேற்க வேண்டும் என்பது போல் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சபா புரொமோஷனில் பங்கேற்கும் தகவல் பற்றி எனக்கு முழுமையாக தெரியவில்லை, தயாரிப்பாளர் அதற்கான திட்டத்தை வகுத்திருப்பார் என்று கூறினார்.
நடிகை சபா ஓமரும், ஹிந்தி மீடியம் புரொமோஷனில் பங்கேற்க ஆர்வமாய் உள்ளாராம். விசா கிடைத்தால் நிச்சயம் அவர் புரொமோஷனில் பங்கேற்பார் என்கிறார்கள்.