ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
பாகுபலி-2 கடைசிநேர வெளியீட்டில் இருந்த சிக்கல் தீர்ந்தது. இந்திய சினிமாவையே வியக்க வைத்திருக்கும் பாகுபலி-2 படம் உலகம் முழுக்க ரிலீஸாகியுள்ளது. சில நாடுகளில் நேற்று இரவே ரிலீஸானது. இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் கடைசிநேர வெளியீட்டின் போது சிக்கல் ஏற்பட்டது. விநியோகிஸ்தர்களுக்கும், தயாரிப்பாளருக்கும் இடையே ஏற்பட்ட கொடுக்கல் வாங்கல் பிரச்னையால் படம் தமிழில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. தமிழகத்தில் படத்தை வெளியிடும் விநியோகிஸ்தர், தயாரிப்பாளருக்கு பாக்கி வைத்திருப்பதால், கியூப் தொழில்நுட்பம் மூலம் படம் பதிவேற்றப்படாமல் இருந்தது. இந்நிலையில், பட தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் இடையே சமரசம் ஏற்பட்டதால் தமிழில் பாகுபலி 2 ரிலீஸாவதில் ஏற்பட்ட கடைசிநேர சிக்கல் தீர்ந்தது. பாகுபலி-2 படம் தமிழகம் முழுவதும் 650 திரையரங்குகளில் வெளியாகிறது.