இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட்டிற்கு சென்று விட்ட நடிகை பிரியங்கா சோப்ரா, தற்போது டுவைன் ஜான்சன் உடன் பேவாட்ச் என்ற படத்தில் நடித்துள்ளர். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷ்ன்ஸ் பணிகள் நடந்து வருகிறது. சில தினங்களுக்கு முன்னர் பேவாட்ச் படத்தின் புதிய டிரைலர் ஒன்று வெளியானது. இதில் அசத்தலான தோற்றத்தில் தோன்றினார் பிரியங்கா சோப்ரா. ஹாலிவுட் சென்றுவிட்டதால் பாலிவுட்டில் ஒரு படம் கூட கமிட்டாகமால் இருக்கிறார் பிரியங்கா என்று பேச்சு எழுந்தது.
இதுகுறித்து சமீபத்தில் பேவாட்ச் தொடர்பான நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரியங்காவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது... ‛‛யார் சொன்னது நான் பாலிவுட் படத்தில் நடிக்கவில்லை என்று... நான் மூன்று படங்களில் கமிட்டாகியுள்ளேன். ஆனால் அதுப்பற்றிய தகவலை இப்போது சொல்ல முடியாது. குவாண்டிகோ 3 முடிந்த பிறகு தான் எதையும் சொல்ல முடியும். ஜூன் மாதத்திற்கு பிறகு என் படங்கள் பற்றிய அறிவிப்பை சொல்கிறேன்'' என்றார்.
பிரியங்கா நடித்துள்ள முதல் ஹாலிவுட் படமான பேவாட்ச், வருகிற ஜூன் 2-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.