இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சூர்யாவை வைத்து அதிக படங்களை இயக்கிய ஒரே இயக்குனர் ஹரி. அந்த வகையில், ஆறு படத்தில் கைகோர்த்த சூர்யா-டைரக்டர் ஹரி கூட்டணி அதன்பிறகு வேல், சிங்கம், சிங்கம்-2, சிங்கம்-3 வரை தொடர்ந்தது. அப்படி அவர்கள் கூட்டணி அமைத்த படங்கள் ஓரளவுக்கு பேசப்பட்டதோடு வெற்றியும் பெற்றன. இந்தநிலையில், தற்போது விக்ரம் நடிப்பில் சாமி-2 படத்தை இயக்கத் தயாராகிக்கொண்டிருக்கும் டைரக்டர் ஹரி, அந்த படத்தை முடித்ததும் மீண்டும் சூர்யாவுடன் கைகோர்க்கிறார்.
இந்த செய்தி வெளியானதில் இருந்து, சிங்கம் பெயரில் வெளியான மூன்று படங்களுமே வெற்றி பெற்றதால், சிங்கம்-4 படத்தைதான் சூர்யாவை வைத்து மீண்டும் ஹரி இயக்குவார் என்று கோலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது. ஆனால், இதுபற்றி டைரக்டர் ஹரிதரப்பில் விசாரித்தபோது, மீண்டும் சூர்யா-ஹரி இணைவது உண்மைதான். ஆனால் அது சிங்கம்-4 படமல்ல. வேறு புதிய கதையில் இணைகிறார்கள். சாமி-2 படத்தை இயக்கி முடித்ததும், அடுத்த ஆண்டு மீண்டும் சூர்யா நடிக்கும் படத்தை ஹரி இயக்குவார் என்கிறார்கள்.