கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் | விஷாலின் வரவு செலவு கணக்கு: கோர்ட்டில் தாக்கல் | பிளாஷ்பேக்: இசையிலும் சாதனை படைத்த ராஜ்குமார் | ஹாலிவுட் பட ஆடிசனில் கலந்து கொண்ட பஹத் பாசில் | தெலுங்கு இயக்குனர் சங்கத்திற்கு பிரபாஸ் ரூ.35 லட்சம் நன்கொடை | ‛ஜவான்' பாடலுக்கு நடனமாடிய மோகன்லால் : ஷாருக்கான் நன்றி |
புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பழம்பெரும் நடிகர் வினோத் கண்ணா இன்று(ஏப்.,27-ம் தேதி) மரணம் அடைந்தார். அவருக்கு வயது 70.
1946ம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தில் பிறந்தவர் வினோத் கண்ணா. பி.காம்., பட்டதாரியான இவர், சினிமா மீதுள்ள ஆர்வத்தால் மும்பைக்கு வந்து வாய்ப்பு தேடினார். 1968-ம் ஆண்டு சுனில் தத் நடித்த "மான் கா மீட்" என்ற படத்தின் மூலம் வில்லனாக சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து "மேரி அப்னே, மேரே கான், மேரே தேஷ், கேத்தார், ஜெயில் யாத்ரா, அமர் அக்பர் ஆன்டனி, ராஜ்புட் குர்பானி, ஜூரம்" உள்ளிட்ட பல படங்களில் அவரது நடிப்பு பேசப்பட்டது.
அஜானுபாகுவான உடல் தோற்றமும், அவரது அழகும் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் சுமார் 130-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். கடைசியாக ஷாரூக்கானின் தில்வாலே படத்தில் நடித்திருந்தார்.
நடிகராக மட்டுமல்லாது பஞ்சாப் மாநிலம், குர்தாஸ்பூர் தொகுதி, பா.ஜ., - எம்.பி.,யாகவும் இருக்கும் வினோத் கண்ணா, சமீபத்தில் உடல் நலக்குறைவால், மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். உடலில் நீர் சத்து குறைந்ததால், பாதிக்கப்பட்டார் என்று கூறப்பட்டது. ஆனால் அவருக்கு தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட சிகிச்சையில் அவருக்கு புற்றுநோய் இருப்பது தெரியவந்தது. தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வினோத் கண்ணா, சிகிச்சை பலனின்றி இன்று மரணம் அடைந்தார்.
வினோத் கண்ணாவிற்கு கீதாஞ்சலி, கவிதா என்ற மனைவிகள் உள்ளனர். இதில் முதல் மனைவியான கீதாஞ்சலியை விவாகரத்து செய்துவிட்டார். இவர்களுக்கு ராகுல் கண்ணா, அக்ஷ்ய் கண்ணா, சாக்ஷி கண்ணா என்ற மூன்று மகன்களும், ஸ்ரத்தா கண்ணா என்ற மகளும் உள்ளனர். வினோத் கண்ணா ஓஷோவின் தீவிர பக்தர் என்பது குறிப்பிடத்தக்கது.
உடல் தகனம், பிரபலங்கள் அஞ்சலி: மறைந்த வினோத் கண்ணாவின் உடலுக்கு ரிஷி கபூர், ரன்தீர் கபூர், அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன், ஜாக்கி ஷெரப், ரன்தீப் ஹூடா, சுபாஷ் கை, சரோஜ் கான், சங்கி பாண்டே, ரஞ்சித், கபீர் பேடி, ரமேஷ் சிப்பி, உதித் நாராயணன், முன்னாள் மத்திய அமைச்சர் பிரபுல் பட்டேல் உள்ளிட்ட பலர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் அவரது உடல் ஊர்லி அருகே உள்ள பான்கங்காவில் உள்ள மயானத்தில் வைத்து தகனம் செய்யப்பட்டது.