இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? | பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்னவாகும் - இளையராஜா தரப்புக்கு நீதிபதிகள் கேள்வி | கன்னடத்தில் கால் பதிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் | 17 வருடங்களுக்க பிறகு மீண்டும் சினிமாவுக்கு வருகிறார் விஜய்யின் முதல் நாயகி | ரூ.100 கோடி வசூலித்த பஹத் பாசிலின் 'ஆவேஷம்' | பிளாஷ்பேக்: படங்களுக்கும் இசை அமைத்த சூலமங்கலம் சகோதரிகள் | நடிகர் சங்க கட்டிட நிதிக்கு 50 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன் |
சிம்புவுடன் சரவணா, சரத்குமாருடன் வைத்தீஸ்வரன், பிரசாந்துடன் ஜாம்பவான் என பல படங்களில் கதாநாயகியாக நடித்தவர் மேக்னா நாயுடு. கவர்ச்சி புயலான இவர், கடைசியாக கார்த்தி நடித்த சிறுத்தை படத்தில், அழகா பொறந்து புட்டேன் ஆறடி சந்தனக்கட்ட -என்ற சூப்பர் ஹிட் பாடலில் நடனமாடினார். அதன்பிறகு தெலுங்கு, கன்னடம், இந்தி என நடித்து வந்தவர், கடைசியாக இளமை ஊஞ்சல் என்ற படத்தில் நடித்தார். தற்போது சிலந்தி-2 படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார் மேக்னா நாயுடு.
சிலந்தி படத்தை இயக்கிய ஆதிராஜன், கதை, திரைக்கதை, வசனம், எழுதி, தயாரித்து, இயக்கி வரும் இந்த சிலந்தி-2 படத்தில் ஒரு அதிரடியான குத்துப்பாட்டுக்கு நடனமாடியிருக்கிறார் மேக்னா நாயுடு. லக்கா லக்கா லடுக்கி நான்தான் டாஸ்மாக்கு, பீரு பிராந்தி விஸ்கி தொட்டால்தான் டாஸ்மாக்கு -என்று இயக்குனர் ஆதிராஜனே இந்த பாடலை எழுதியிருக்கிறார். பெங்களூரில் உள்ள ஒரு பிரபலமான பாரில் படமாக்கப்பட்டுள்ள இந்த பாடலுக்கு கலை நடனம் அமைத்துள்ளார். இந்த குத்துப்பாட்டு தனக்கு கோலிவுட்டில் நல்லதொரு ரீ-என்ட்ரியாக அமையும் என்று எதிர்பார்க்கிறார் மேக்னாநாயுடு.