ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
சதுரங்க வேட்டை படத்தில், நட்டிக்கு ஜோடியாக நடித்தவர் இஷாரா நாயர். அதன் பின், போதிய வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சற்று இடைவெளிக்கு பின், தற்போது, அதி மேதாவிகள் என்ற படத்தில் நடித்து வருகிறார். 'இந்த படத்துக்காக உடல் எடையை குறைக்க வேண்டும் என, இயக்குனர் கூறினார். ஆனால், அதற்கு, 10 நாட்கள் மட்டுமே அவகாசம் கொடுத்தார். நானும், கடுமையாக சிரமப்பட்டு, அவர் கூறியபடி, 10 நாட்களில் எடையை குறைத்தேன்' என்கிறார், இஷாரா. ஆனால், 10 நாட்களில் எத்தனை கிலோ குறைத்தார் என்பதை மட்டும், கடைசி வரை அவர் கூறவில்லை. இந்த படம், காதலை சொல்லும் படமில்லையாம்; நட்பின் பெருமையை கூறும் படமாம்.