பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
மசாலா படங்களையும், வரலாற்று படங்களையும் மட்டும் தான், பிரம்மாண்டமாக எடுக்க முடியுமா; பேய் படங்களையும் பிரம்மாண்டமாக எடுக்க முடியும் என, சவால் விட்டு எடுக்கப்பட்ட படம் தான், சங்கிலி புங்கிலி கதவ தொற. பிரம்மாண்ட பங்களா, அதில் நடக்கும் திகிலுாட்டும் சம்பவங்கள் தான், படத்தில் கதையாம். ஜீவா, ராதிகா, கோவை சரளா, சூரி, தம்பி ராமையா என, ஒரு நட்சத்திர பட்டாளமே, இந்த படத்தில் நிரம்பி வழிகிறது. புதுமுக நடிகையரின் வரவுக்கு பின், கோடம்பாக்கத்திலிருந்து, கொஞ்ச நாள் காணாமல் போன, ஊதா கலரு ரிப்பன் ஸ்ரீதிவ்யா, இந்த படத்துக்காக மீண்டும் வந்துள்ளார். முதல் முறையாக, ஜீவாவுடன் ஜோடி சேர்ந்து உள்ளார் அவர். இது போன்ற படங்கள் தொடர்ச்சியாக வருவதை பார்த்தால், தமிழ் சினிமாவில், பேய் டிரென்டிற்கு இப்போதைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வாய்ப்பில்லை போலிருக்கிறது.