‛கில்லி' ரீ-ரிலீஸ் : த்ரிஷா நெகிழ்ச்சி | சந்தானத்தின் இங்க நான் தான் கிங்கு படம் மே 10 ல் ரிலீஸ் | பைக் டாக்சி ஓட்டுனராக நடிக்கும் நக்ஷா சரண் | எழுத்தாளராக நடிக்கும் வெற்றி | ஈரோடு மகேஷ் இல்லையென்றால் சினிமாவில் நான் இல்லை : தமன்குமார் நெகிழ்ச்சி | அரசியல்வாதிகள் நல்லது செய்தால் நடிகர்கள் அரசியலுக்கு வரமாட்டார்கள் : விஷால் | பிளாஷ்பேக்: நடிகையை திருமணம் செய்த முதல் இயக்குனர் | அன்பே வா சீரியல் நடிகருக்கு திருமணம் | எதிர்நீச்சல் நடிகையின் ஜாலி டூர் கிளிக்ஸ் | நடன பள்ளி தொடங்கிய காயத்ரி - யுவராஜ் |
ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் 2.0 படத்தின் ரிலீஸ் தேதி தீபாவளியிலிருந்து பின்வாங்கி 2018ம் ஆண்டு ஜனவரி 25க்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. உலக தரத்தில் கிராபிக்ஸ் பணிகளை மேற்கொள்ளவே இந்த மாற்றம் என்று தயாரிப்பு தரப்பிலிருந்து காரணம் சொல்லப்பட்டது.
அதுமட்டுமல்ல, முடிக்கப்பட வேண்டிய கிராபிக்ஸ் பணிகள் இன்னும் இருப்பதாகவும், அதற்காகத்தான் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் என்று படத்துறையில் பேசப்பட்டது.
இந்நிலையில் கனடாவில் 2.0 படத்துக்கான மோஷன் கேப்சர் பணிகள் தொடங்கப்பட்டுள்ள தகவல் தற்போது வெளியாகி உள்ளது. அதாவது, 2.0 படத்தின் சண்டைக்காட்சிகளுக்கு இந்த டெக்னாலஜியை ஷங்கர் பயன்படுத்தியுள்ளாராம். கனடாவைச் சேர்ந்த டாவு பிலிம்ஸ் என்ற நிறுவனம் 2.0 படத்துக்கு மோஷன் கேப்சர் டெக்னாலஜியில் பணிகள் செய்து வருவதாக தங்களுடைய பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அது மட்டுமல்ல, அப்போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.
ஏற்கனவே சூர்யா இரட்டை வேடத்தில் நடித்த மாற்றான் படத்தில் மோஷன் கேப்சர் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுமுள்ளது. ரஜினியை வைத்து சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய கோச்சடையான் படம் முழுக்க முழுக்க மோஷன் கேப்சர் டெக்னாலஜியில் உருவாக்கப்பட்டது.