600க்கும் அதிகமான தியேட்டர்களில் 'கில்லி' ரீ-ரிலீஸ் | இந்தியாவில் தேர்தல் திருவிழா : ஓட்டளித்து ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரைப்பிரபலங்கள்...! | 'ஆதிசக்தி' : புதிய பயணத்தை துவங்கிய சம்யுக்தா | ரீ-ரிலீஸ் ஆகும் ‛மங்காத்தா' | மகாபாரத கதையை 2 பாகங்களாக இயக்கும் லிங்குசாமி | சிகரெட் பிடிக்கும் நான் அட்வைஸ் பண்ணியதை ரசிகர்கள் ஏற்கவில்லை : பஹத் பாசில் | இன்ஸ்டா கணக்கு நீக்கம் : யுவன் விளக்கம் | விஷம் கலந்த ஜூஸ் கொடுத்து விட்டார்கள் : நடிகர் மன்சூரலிகான் குற்றச்சாட்டு | ஏ.ஆர்.ரஹ்மானின் தேர்தல் விழிப்புணர்வு பிரச்சாரம் | 'பிரேமலு' படத்தைப் பாராட்டிய நயன்தாரா |
குறிப்பிட்ட வேடத்தில் நடித்தால் அந்த வேடத்தையே தொடர்ந்து கொடுப்பார்கள் என்று பயப்படும் கலைஞர்கள் மத்தியில், ஒரு பக்கம் குணசித்திர வேடங்களில் நடித்துக் கொண்டே இன்னொரு பக்கம் ஹீரோவாகவும் நடித்து வருகிறார் சமுத்திரக்கனி.
கதையில் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதில் கை தேர்ந்தவராகவும் இருக்கிறார். அதனாலேயே அவர் ஏற்கும் குணச்சித்திர வேடங்கள் மூலம் ரசிகர்களிடயே பாராட்டுக்களையும் வரவேற்பையும் தக்க வைத்துக்கொண்டு வருகிறார்.
சமுத்திரக்கனியின் நடிப்பில் அடுத்து வெளிவரவிருக்கும் படங்கள் கொளஞ்சி மற்றும் தொண்டன். சமுத்திரக்கனி இயக்கி நடிக்கும் 'தொண்டன்' படம் மே 5ஆம் தேதி வெளியிட இருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மூடர்கூடம் பட இயக்குநர் நவீன் தயாரிப்பில் சமுத்திரக்கனி நடித்திருக்கும் கொளஞ்சி படமும் அதே நாளில் வெளியாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
கடந்த சில நாட்களாக கொளஞ்சி படத்தின் விளம்பர போஸ்டர்கள் வெளியாகிக் கொண்டிருக்கிறது. ஒரே நாளில் சமுத்திரக்கனியின் இரண்டு படங்களும் ரீலீஸ் ஆகுமா? அல்லது இரண்டில் ஒரு படத்தை சில வாரங்களுக்கு தள்ளி வைப்பார்களா என்பது இன்னும் ஒரு சில நாட்களில் தெரிந்துவிடும்.