ஜோதிகா, சமந்தா, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க தயங்கிய கேரக்டரில் ஆண்ட்ரியா : கோபி நயினார் | ஹீரோயின் ஆன சஞ்சனா சிங் | நட்சத்திர ஓட்டலில் திருமணநாளை கொண்டாடிய அஜித் - ஷாலினி ஜோடி | சிவாஜியின் மகன் சாம்பாஜி வாழ்க்கை சினிமா ஆகிறது | மூத்த நடிகர்களை களமிறக்கும் ஆடுகளம் சீரியல் | டப்பிங் யூனியனில் ரூ.60 ஆயிரம் கட்டினேன் : வருத்தத்தில் ரேவதி பாட்டி | புதுவீட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ரச்சிதா | 12,000 பேர் பங்கேற்ற ஆடிஷன் : பட்டய கிளப்ப வருது ‛சரி க ம ப' சீசன் 4 | அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடித்தால் விமர்சிப்பதா? - மனுசி சில்லார் ஆவேசம் | 'அமரன்' நிஜ கதாநாயகனுக்கு அஞ்சலி செலுத்திய இயக்குனர் |
பிரபல பாலிவுட் நடிகை சகாரிகா சக்தே. மும்பை மாடல் அழகியான இவர் ஜக் தே இந்தியா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகமானார். அதில் அவர் சிறிய கேரக்டரில் நடித்தார். ரஷ் படத்தின் மூலம் ஹீரோயின் ஆன சகாரியா, ஜீ பார் கி ஜே ஜே, இரடா படங்களில் நடித்தார். இது தவிர மராத்தி மற்றும் பஞ்சாபி படங்களிலும் நடித்துள்ளார்.
சகாரியாவும், இந்திய கிரிக்கெட் விரர் ஜாகீர்கானும் காதலித்து வந்தனர். தற்போது இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார்கள். இதனை ஜாகீர்கான் தனது பேஸ்புக்கில் அறிவித்துள்ளார். இருவருக்கும் மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் நடந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர், சகாரிகா நிச்சயதார்த்த மோதிரத்துடன் இருக்கும் போட்டோவையும் வெளியிட்டுள்ளார். ஜாகீர்கான் தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டில்லி டேர்டெவில்ஸ் அணி கேப்டனாக இருக்கிறார். ஐபிஎல் போட்டிகள் முடிந்ததும் திருமணம் நடக்கும் என்று தெரிகிறது. ஜாகீர்கானின் திருமண அறிவிப்பை தொடர்ந்து அவருக்கும், சகரிகாவுக்கும் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.