'பிரேமலு 2' அறிவிப்பு : 2025ல் வெளியாகும்… | 'ரோமியோ' படத்தை 'அன்பே சிவம்' படத்துடன் ஒப்பிட்ட விஜய் ஆண்டனி | ஓட்டு கூட போடாத திரைப்பிரபலங்கள்...! | விஜய்யைக் காப்பியடிக்கும் விஷால் : ரசிகர்கள் கிண்டல் | தொடர் தோல்வியில் தவிக்கும் அக்ஷய் குமார் :'சர்பிரா' காப்பாற்றுமா ? | பிரித்விராஜ் - ஏ.ஆர்.ரஹ்மான் இருவருமே உதவி செய்தார்கள் : ஆடுஜீவிதம் ரியல் நஜீப் தகவல் | ஓட்டளிக்க முடியாமல் வேதனையுடன் திரும்பிய சூரி | ஹிந்தி உரிமையில் சாதிக்கும் தெலுங்குப் படங்கள் | ஓட்டளிக்க வந்த விஜய் கையில் காயம் | பிஎம்டபிள்யூ கார் வாங்கிய டான் பட இயக்குனர் |
கடந்த மூன்று நாட்களாக ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டார் பாலிவுட் நடிகர் என சொல்லிக்கொள்ளும் நடிகர் கமால் ரஷீத் கான். தி கம்ப்ளீட் ஆக்டர் என புகழப்படும் மலையாள நடிகர் மோகன்லாலை ஜோக்கர், சோட்டா பீம் என தரக்குறைவான வார்த்தைகளில் கன்னாபின்னாவென விமர்சித்து தொடர்ந்து கிட்டத்தட்ட 25 ட்வீட்டுகள் பக்கம் பதிவிட்டிருந்தார். இவற்றின் ஒவ்வொரு பதிவுக்கும் மோகன்லால் ரசிகர்கள் மட்டுமல்லாது மலையாள சினிமா ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் பதிலடி கொடுத்து வந்தனர்..
இந்தநிலையில் ரசிகர்களின் எதிர்ப்பை ஓரளவுக்கு மேல் தாக்குப்பிடிக்க முடியாத கமால் ரஷீத் கான், இப்படியே போனால் இது தனக்கு நல்லதல்ல என்பதை உணர்ந்து தடாலடியாக மோகன்லாலிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.. இதுகுறித்து இவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், “மோகன்லால் சார், உங்களை பற்றி சரியாக தெரியாமல் உங்களை மோசமாக விமர்சித்து விட்டேன்.. இப்போது தான் நீங்கள் யாரென்பதை உணர்ந்துகொண்டேன்.. நீங்கள் தான் மலையாள சூப்பர்ஸ்டார்.. என்னை மன்னித்து விடுங்கள்” என கெஞ்சாத குறையாக மன்னிப்பு கேட்டுள்ளார். கொஞ்சம் ஓவராக போனாலும், இந்த மனிதருக்கு இப்போதாவது புத்தி வந்ததே என ஆசுவாச பெருமூச்சு விடுகின்றனர் இந்த சர்ச்சையை கடந்த இரண்டு நாட்களாக கவனித்து வந்த பிரபலங்கள்.