என்ன கமெண்ட் இதெல்லாம்? கடுப்பான ரோபோ சங்கர் மருமகன் | டைம் டிராவல் கதையா...! : வெளியானது ரஜினி 171 பட அப்டேட் | சூர்யாவின் 44வது படத்தை இயக்கும் கார்த்திக் சுப்பராஜ் | மலையாள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கைகலப்பு : போட்டியாளர் மருத்துவமனையில் அனுமதி | இயக்குனர் சங்கத்தில் உறுப்பினர் அட்டை பெற்றார் மோகன்லால் | சூர்யா நடிக்கயிருந்த கதையில் விஜய் சேதுபதி | ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் சிவகார்த்திகேயன் படம் | மல்டி ஸ்டார் படமாக உருவாகும் இளையராஜா பயோபிக் | திருமணத்தில் அப்பா விவேக்கின் கனவை நனவாக்கிய மகள் தேஜஸ்வினி | சித்தார்த் - அதிதிக்கு நிச்சயதார்த்தம் நடந்தது...! - இருவரும் அறிவிப்பு |
நட்சத்திர தம்பதியர்களான தர்மேந்திரா - ஹேமமாலினியின் மகள் இஷா தியோல். நடிகையும் கூட, பாலிவுட்டில் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் கூட மணிரத்னம் இயக்கிய ‛ஆயுத எழுத்து' படத்தில் சூர்யாவின் காதலியாக நடித்திருந்தார். இவருக்கு, கடந்த 2012-ம் ஆண்டு தொழிலதிபர் பரத் தக்தானியுடன் திருமணம் நடந்தது. இந்நிலையில் ஐந்தாண்டுகளுக்கு பிறகு தற்போது கர்ப்பமாக இருக்கிறார் இஷா தியோல். இந்தாண்டு இறுதியில் அவருக்கு குழந்தை பிறக்கும் என தெரிகிறது. மகள் கர்ப்பமாக இருப்பதை எண்ணியும், தான் பாட்டி ஆவப்போவதையும் எண்ணி மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார் ஹேமமாலினி.
கடந்த இருதினங்களுக்கு முன்னர் தான் பாலிவுட்டில் மற்றுமொரு நடிகையான சோகா அலிகான், கர்ப்பமாக இருக்கும் செய்தி வந்தது குறிப்பிடத்தக்கது.