பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
விஜய் டி.வியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி தற்போது பரபரப்பான கட்டத்தை நெருங்கி உள்ளது. அடுத்தடுத்து வரும் எபிசோட்களில் பெரிய திரை பாடகர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை மெருகூட்ட இருக்கிறார்கள்.
பாடகர் ஹரிச்சரண் தனது டுவிட்டரில் "சூப்பர் சிங்கர் சூப்பரான செலிபிரிட்டிகளுடன் கலக்கப்போகிறது" என்று தெரிவித்துள்ளார். பாடகியான, ஆண்ட்ரியா சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின்போது யுவன் சங்கர் ராஜாவுடன் இணைந்து எடுத்த செல்பியை வெளியிட்டுள்ளார். பாடகர் ராகுல் நம்பியார் தனது டுவிட்டரில் "சூப்பர் சிங்கர் யுவனுடன் சூப்பர் சிங்கர் ஸ்பெஷல் வரப்போகிறது" என்று குறிப்பிட்டுள்ளார். பாடகி சுவேதா மோகனும் யுவன் நிகழ்ச்சி பற்றி மகிழ்ச்சியுடன் தெரிவித்திருக்கிறார்.
யுவன் பங்கேற்ற சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பிரமாதமாக வந்திருப்பதாக விஜய் டி.வி.வட்டாரங்கள் தெரிவிக்கிறது. யுவன் இதுவரை இல்லாத அளவிற்கு அதிக ஈடுபாட்டுடன் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றிருக்கிறார் என்றும் நான்கைந்து எபிசோட்கள் யுவனின் சிறப்பு நிகழ்ச்சியா போகும் என்கிறார்கள்.