பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி? | விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர் | கள்ளழரை அருகில் கண்ட பேரானந்தத்தில் சூரி | ரஜினியின் கூலி படத்தில் இணைந்த சிவகார்த்திகேயன் பட வசனகர்த்தா | 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்த ‛இனிமேல்' ஆல்பம் | டில்லியில் தக்லைப் படக்குழு : கமல் - சிம்பு - கவுதம் கார்த்திக் பங்கேற்பு | கார் விபத்து வழக்கு - நீதிமன்றத்தில் ஆஜரான யாஷிகா | 'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப் | மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால் | 'குரங்கு பெடல்' 80ஸ் கிட்ஸின் கதை : கமலக்கண்ணன் |
சஞ்சய் தத் நடித்துள்ள பூமி படத்திற்கு புதிய ரிலீஸ் தேதி வெளியிடப்பட்டுள்ளது. தந்தைக்கும் மகளுக்கும் இடையே நடக்கும் உணர்வு ரீதியிலான பழிவாங்குதலை மையமாகக் கொண்ட படம் பூமி. ஒமங்க் குமார் இயக்கி உள்ள இப்படத்தில் சஞ்சய் தத் உடன் அதிதி ராய் ஹைதரி, ஷேகர் சுமன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 4 ம் தேதி ரிலீசாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது ஆகஸ்ட் 4 ம் தேதிக்கு பதிலாக செப்டம்பர் 22 ம் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை உறுதி செய்துள்ள படத்தின் தயாரிப்பாளர் பூஷண் குமார், இந்த ஆண்டு செப்டம்பர் 22 ம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய இறுதியாக முடிவு செய்துள்ளோம். இது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றியதை சஞ்சய் தத்தும், படக்குழுவினரும் முழுமனதாக ஏற்றுக் கொண்டுள்ளனர். படத்தின் ரிலீஸ் ஒரு மாதம் தள்ளிப் போவதால், படத்தின் புரோமோஷன் வேலைகளுக்கு போதிய அவகாசம் கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.